திருப்பாவை பாடல் 30 விளக்கம்
Thiruppavai is a revered Hindu spiritual song sung by Andal, also known as Nachiyar, who is celebrated as the greatest devotee of Lord Perumal. This magnificent text consists of 30 Pasurams, representing the 30 days of the Margazhi month. Below are the lyrics of all 30 songs in Tamil along with their meanings.
திருப்பாவை பாடல் 30 விளக்கம் – Thiruppavai Tamil with Meaning
திருப்பாவை பாடல் 1) மார்கழித் திங்கள் ராகம்: நாட்டைமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்பொருள்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடித் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
விளக்கம்:
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான்” என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
பாடல் 2) வையத்து வாழ்வீர்காள்! ராகம்: கௌள
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டுப் எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்சியும்
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
அன்புத்தோழியரே! அந்த பரந்தாமனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.
விளக்கம்:
விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்.
இப்போது, நீங்கள் திருப்பாவை பாடல்களின் PDF வடிவமைப்பை இங்கே பதிவுக்கு கிளிக்கவும்.